சின்னத்திரைக்கு வருகிறார் இனியா
அதன் பிறகு சென்னையில் ஒருநாள், மவுனகுரு, அம்மாவின் கைபேசி, கண்பேசும் வார்த்தைகள் உள்பட பல படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் முதல் வரிசைக்கு வர முடியவில்லை. ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தார்.
இந்த நிலையில் சின்னத்திரைக்கு வருகிறார் இனியா.
விரைவில் முன்னணி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக இருக்கும் கண்ணான கண்ணே என்ற தொடரில் நடிக்கிறார். இதில் அவர் வில்லியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த தொடரில் ஹீரோவாக ராகுல் ரவி நடிக்கிறார். இவர் ஏற்கனவே நந்தினி, சாக்லேட் சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர நிமிஷிகா, அக்ஷிதா, நித்யா தாஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
சின்னத்திரைக்கு வருகிறார் இனியா
Reviewed by Author
on
September 26, 2020
Rating:

No comments:
Post a Comment