அண்மைய செய்திகள்

  
-

பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் மன்னார் நானாட்டானில் தொல்லியல் களஆய்வு (மேலாய்வு)

மன்னார் நானாட்டான் பகுதியில் அண்மையில் 18.09.2020 அன்று குறித்த தனியார் காணி ஒன்றில் அத்திவாரம் வெட்டும் போது 1902 நாணயங்கள் கண்டு பிடிக்கப்பட்டன அவ் இடத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஸ்ட பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், ப.கபிலன் யாழ்ப்பாண கோட்டை புனர்நிர்மான உத்தியோகத்தர், வி.மணிமாறன் யாழ் கோட்டை அகழ்வாய்வு உத்தியோகத்தர், தொல்லியல்துறை பட்டதாரி மாணவர்கள் ச.தசிந்தன், க.கிரிகரன் ஆகியோர் தொல்லியல் கள ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்

இவ் தொல்லியல் களஆய்வு சில நாணயங்கள் கண்டு பிடிக்கப்பட்டதுடன் அவற்றினை ஆராய்ந்த பேராசிரியர் இதேபோல் நாணயங்கள் எமக்கு ஏற்கனவே கிடைக்கப் பெற்றதாகவும் இவ் நாணயத்தின் தொன்மை புதியதொரு வெளிச்சத்தை வன்னிப்பிராந்தியத்தில் ஏற்படுத்தும் எனக்கூறினார் இது பற்றி மிக விரைவில் ஆதார பூர்வமான தகவல்களை கட்டுரையில் வெளிப்படுத்துவதாகவும் கூறினார்

இக்கள ஆய்வு மையத்திற்கு வந்த பாராளுமன்றம் உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நானாட்டான் பிரதேச செயலகர் மா.சிறீஸ்கந்தகுமார் மற்றும் நானாட்டான் உபதவிசாளர் ஜொனி உறுப்பினர்கள் புவணம் மற்றும் மதகுரு அருண் புஷ்பராஜ் கிராமவாசிகளான செல்வம், கணேஸ், ஜெயசீலன் ஆகியோர் இதன் தொன்மை பற்றி பேராசிரியரிடம் கேட்டறிந்து கொண்டனர்

பின்னர் நானாட்டான் பிரதேச செயலகர் மா.சிறீஸ்கந்தகுமார் அவர்களின் அழைப்பில் வரலாற்று தொல்லியல் எச்சங்கள் காணப்படும் நொச்சிக்குளம், பல்லன்கோட்டை, சாலம்பன், இராமடு, அருவியாற்றின் கரையோரப் பகுதிகள் ஆகிய தொல்லியல் எச்சங்கள் காணப்படும் மையங்களை பிரதேச செயலகரின் உதவியுடன் கள ஆய்வு செய்தோம்

இக்கள ஆய்வில் கலந்து கொண்ட நானாட்டான் பிரதேச செயலகர் மா.சிறீஸ்கந்தகுமார் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் எவ்வளவோ வேலைப்பலுக்களுக்கு மத்தியில் நேரத்தை செலவிட்டு எங்களுக்காய் ஆர்வத்துடன் செயலாற்றியமைக்கு நன்றிகள் அத்துடன் பிரதேச சபை உறுப்பினர்கள், ஆர்வலர்கள் எம்முடன் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகள்

இவ்வாய்வின் கண்டுபிடிக்கபட்டவை வட இலங்கைத் தமிழர் வரலாற்றில் பாரிய செல்வாக்கையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தும், அத்தகவல்கள் விரைவில் பேராசிரியரால் வெளிப்படுத்தபடும்


















பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் மன்னார் நானாட்டானில் தொல்லியல் களஆய்வு (மேலாய்வு) Reviewed by NEWMANNAR on September 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.