அண்மைய செய்திகள்

recent
-

முல்லை ஊடகர்கள் மீதான தாக்குதல்; பிரதான நபர் அடங்கலாக இருவர் கைது!

முல்லைத்தீவு – முறிப்பு காட்டுப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களான க.குமணன் மற்றும் ச.தவசீலன் ஆகியோரை மூர்க்கமாக தாக்கிய மரக்கடத்தல் காரர்களில் இருவர் நேற்று(13) கைது செய்யப்பட்டுள்ளார்.

 தாக்குதலை மேற்கொண்ட கும்பலில் பிரதான நபரான அனோசன் என்பவர் உட்பட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2வது சந்தேக நபரை 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 அத்துடன் ஊடகவியலாளர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட ஊடகச் சாதனங்கள், பணம் உள்ளிட்டவற்றை உடைமையில் வைத்து இருந்தார் என்ற குற்றச்சாட்டில், 2வது சந்தேக நபரின் மனைவியும் கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட நால்வரில் அடையாளம் காணப்பட்ட இருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் தேடப்படுகின்றனர்.

முல்லை ஊடகர்கள் மீதான தாக்குதல்; பிரதான நபர் அடங்கலாக இருவர் கைது! Reviewed by Author on October 14, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.