சீனத் தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை!
இன்று(புதன்கிழமை) குறித்த குழுவினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை மாத்திரமே சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகின்றது.
சர்வதேச தொற்று நோயாக உருவெடுத்துள்ள கொரோனாவை எதிர் கொள்வது மற்றும், பொருளாதார உறவுகளைப் புதுப்பிப்பது போன்ற இரு தரப்பு விடயங்கள் குறித்து இதன்போது பேசப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை ஜனாதிபதியையும் பிரதமரையும் குறித்த குழுவினர் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பைத் தவிர வேறு இடங்களுக்கு இவர்கள் செல்லமாட்டார்கள் எனவும் கூறப்படுகின்றது.
சுகாதார அமைச்சினால் தெரிவிக்கப்படும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளுடனேயே இவர்களுடைய விஜயம் இடம்பெறவுள்ளது.
கொரோனாத் தொற்று பரவத் தொடங்கியதையடுத்து இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டு உயர்ட்டக்குழு இது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனத் தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை!
Reviewed by Author
on
October 08, 2020
Rating:

No comments:
Post a Comment