அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா பிரித்தானியாவில் பதற்றத்தை கொடுக்கிறது -பிரதமர் பொரிஸ் ஜோன்சன்

16,000 புதிய என்ற அதிகரிப்பு தொற்று தொடர்பான பதற்றத்தை ஏற்படுத்துகின்றது – பிரதமர் ஜோன்சன்.கடந்த வாரத்தில் இணைக்கப்படாத அடையாளம் காணப்பட்ட 16,000 நோயாளிகளை தற்போது சேர்ப்பது பிரித்தானியாவின் தொற்று பற்றிய பதற்றத்தை கொடுக்கிறது என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். 

அத்தோடு கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் அமுலாக்கங்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை அடுத்த சில நாட்கள் மற்றும் வாரங்களில் அறிந்துகொள்ள முடியும் என்று அவர் கூறினார்.கடந்த வார புள்ளி விவரங்களுடன் கூடுதல் நோயாளிகளும் சேர்க்கப்பட்ட நிலையில், பிரித்தானியாவிலேயே மிக உயர்ந்த தொற்று விகிதம் மான்செஸ்டரில் காணப்படுகின்றது. 

 100,000 பேரில் 495.6 பேர் தொற்றுக்குள்ளாகினறனர் என்றும் இது கடந்த வாரத்தில் 223.2 ஆக இருந்தது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது அதிகபட்சமாக லிவர்பூலில் 287.1 ஆகவும் அருகிலுள்ள நோவ்ஸ்லி மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.நியூகேஸில் அபன் டைன், நாட்டிங்ஹாம், லீட்ஸ் மற்றும் ஷெஃபீல்ட் ஆகிய இடங்களிலும் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையை மொத்தத்தில் சேர்க்கப்பட்டவுடன் பாரிய அதிகரிப்புகளைக் காட்டியமை குறிப்பிடத்தக்கது.







கொரோனா பிரித்தானியாவில் பதற்றத்தை கொடுக்கிறது -பிரதமர் பொரிஸ் ஜோன்சன் Reviewed by Author on October 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.