ரிஷாத் பதியுதீனை கைது செய்ய நான்காவது நாளாகவும் கிழக்கில் தேடுதல் நடவடிக்கை
இந்நிலையில் பொத்துவில், அம்பாறை, சம்மாந்துறை, நிந்தாவூர் மற்றும் கல்முனை பகுதிகளில் உள்ள பதியுதீனின் நெருங்கியவர்களிடம் அவர் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
2019 ஜனாதிபதித் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்த மக்களை ஏற்றிச்செல்ல அரச நிதியை துஸ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ரிசாத் பதியுதீனை கைது செய்ய ஆறு தனி பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஏற்கனவே குற்றப்புலனாய்வுத்துறையினர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியுதீனின் மனைவி ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.
.
ரிஷாத் பதியுதீனை கைது செய்ய நான்காவது நாளாகவும் கிழக்கில் தேடுதல் நடவடிக்கை
Reviewed by Author
on
October 18, 2020
Rating:

No comments:
Post a Comment