அண்மைய செய்திகள்

recent
-

விஜயகாந்த் மீண்டும் மருத்துவனையில்?

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு திடீரென மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

 இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்தியில், அவர் 15 நாட்கள் கழித்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம். விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியன்று லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் அக்டோபர் 2ஆம் தேதி அவர் வீடு திரும்பினார். விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

 இதற்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின் சென்னை திரும்பிய அவர், கடந்த சில மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த விஜயகாந்த், தேமுதிகவின் 14 வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 14 ஆம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

விஜயகாந்த் மீண்டும் மருத்துவனையில்? Reviewed by Author on October 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.