இந்தியரின் வருகையால் கொரோனா தொற்று என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கம்பஹா – மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆடைத்தொழிற்சாலையில் இருந்து பரவிய கொரோனா தொற்றுக்கும் இந்தியர்களுக்கும் இடையில் தொடர்பு உண்டு என குறிப்பிடப்படும் செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் கிடையாது. இவ்விடயம் தொடர்பாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
வைரஸ் தொற்று பரவல் மூலம் கண்டறிவது இலகுவான காரியமல்ல, ஒரு கட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்படும் போது அவர்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்படுகிறது. ஆகவே நிலைமையினை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறன” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியரின் வருகையால் கொரோனா தொற்று என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது.
Reviewed by Author
on
October 08, 2020
Rating:

No comments:
Post a Comment