யாழில் அரச அறிவிப்பை மீறிய கல்வி நிலையங்களுக்கு சீல் வைப்பு
கரணவாய் மற்றும் வதிரி பகுதியில் இயங்கி வந்த இரண்டு தனியார் கல்வி நிலையங்களே நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இலங்கை பூராகவும் உள்ள தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதனை கருத்தில் கொள்ளாது தொடர்ந்து கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரியின் பணிப்பிற்கமைய அப்பகுதி சுகாதாரப் பரிசோதகர்களால் கல்வி நிலையம் சீல் வைக்கப்பட்டது.
யாழில் அரச அறிவிப்பை மீறிய கல்வி நிலையங்களுக்கு சீல் வைப்பு
Reviewed by Author
on
October 13, 2020
Rating:

No comments:
Post a Comment