மன்னார் மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை -சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருகை
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை. 9.30 மணிக்கு பரிட்சை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் நேரத்திற்கு பரிட்சை மண்டபத்திற்கு சென்றுள்ளனர்.
குறிப்பாக மாணவர்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக முகக்கவசம் அணிந்து பாடசாலைக்குச் சென்றுள்ளனர். மாணவர்களுடன் பெற்றோரும் பாடசாலையின் நுழைவாயில் வரை சென்றுள்ளனர்.
எனினும் பெற்றோர் பாடசாலை நுழைவாயில் வரை மாத்திரமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாணவர்களின் உடல் வெப்ப நிலை அளவீடு செய்யப்பட்டு கை சுத்தம் செய்யப்பட்ட பின்னரே பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.ஒரு சில பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர் கூட்டாமாக பாடசாலைக்கு முன் நின்றுள்ளனர்.
இவர்கள் சுகாதார நடை முறையினை பின் பற்றினாலும் சமூக இடைவெளியை பின் பற்றாமல் கூட்டமாக நின்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
மன்னார் மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை -சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருகை
Reviewed by Author
on
October 11, 2020
Rating:

No comments:
Post a Comment