இள வயது முரளிதரனாக நடிக்க இளம் நடிகர் ரீஜே அருணாச்சலம் மறுப்பு; குவியும் பாராட்டு!
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரீஜே அப்படத்தில் நடிக்க மறுப்புத் தெரிவித்ததற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நான் இந்தியாவில் இருந்த போது ‘800’ படக்குழு என்னை அணுகியது. நான் அவர்களின் அலுவலகத்திற்குச் சென்று கதையின் சில பகுதிகளைக் கேட்டேன்.
எனக்கு இளவயது முரளிதரனாக நடிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.
எனினும், ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிய சரியான அணுகுமுறை இப்படத்தில் இல்லை என எனக்குத் தோன்றியது. எனது தாய் ஈழத்தில் பிறந்தவர். ஆதலால் அந்த கதையின் பட அரசியலுக்குள் புகுந்து கொள்ள நான் விரும்பவில்லை. அதனால் மறுப்புத் தெரிவித்தேன்” என்றுள்ளார்.
இள வயது முரளிதரனாக நடிக்க இளம் நடிகர் ரீஜே அருணாச்சலம் மறுப்பு; குவியும் பாராட்டு!
Reviewed by Author
on
October 17, 2020
Rating:

No comments:
Post a Comment