அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா பயணக்கட்டுப்பாடுகளை மீறி நியூசிலாந்துக்குள் நுழைந்த படகு

கொரோனா சூழலினால் நியூசிலாந்தில் எல்லைக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனுமதியின்றி படகு மூலம் நியூசிலாந்துக்குள் நுழைந்த மூன்று ஜெர்மனியர்கள் அந்நாட்டின் Bay of Islands பகுதியில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். 

 இவர்களுக்கு கொரோனாவுக்கான சோதனை நடத்தப்பட்டதில் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. நியூசிலாந்துக்குள் நுழைய அந்நாட்டு சுகாதாரத்துறையிடம் ஜெர்மனியர்கள் அனுமதிக்கோரியிருந்த நிலையில், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

 ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மாலுமிகளான இவர்கள் விரைவில் நாடுகடத்தப்பட இருப்பதாக நியூசிலாந்து குடிவரவுத்துறை தெரிவித்துள்ளது. சொரோனா சூழலினால், படகு வழியாக வருபவர்களுக்கு அனுமதி மறுத்து வரும் நியூசிலாந்து அரசு படகு பழுதுப் பார்த்தல், மனிதாபிமான அவசரநிலைகளுக்கு மட்டுமே எல்லைக்குள் நுழைய விலக்களிக்கிறது.

 Automatic Identification System தகவலின் அடிப்படையில், இப்படகு French Polynesia பகுதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு கிளம்பியிருக்கிறது. அதாவது, கொரோனா காரணமாக நியூசிலாந்தில் எல்லைக்கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்ட பின்னர் இப்படகு பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 அத்துடன், தற்போது எவ்வித சூறாவளி அச்சுறுத்தலும் இல்லாததால்  மனிதாபிமான அவசரநிலைகள் அடிப்படையிலும் இப்படகிற்கு விலக்களிக்கப்படவில்லை. “கொரோனா பரவலைத் தடுக்கவும் நியூசிலாந்து மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உள்ளிட்ட நல்ல காரணத்திற்காக நியூசிலாந்தின் எல்லைக்கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது,” எனக் கூறியுள்ள நியூசிலாந்து குடிவரவுத்துறையின் எல்லை மற்றும் விசா நடவடிக்கைகளுக்கான தேசிய மேலாலர் பீட்டர் எல்ம்ஸ், இந்த எல்லைக்கட்டுப்பாடுகளை மீறுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்.

 தற்போது நாடுகடத்தப்படவுள்ள ஜெர்மன் மாலுமிகள், எதிர்காலத்தில் நியூசிலாந்துக்கும் இன்னும் பிற நாடுகளுக்கும் பயணிப்பதில் சிக்கல் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் பீட்டர் எல்ம்ஸ்.

கொரோனா பயணக்கட்டுப்பாடுகளை மீறி நியூசிலாந்துக்குள் நுழைந்த படகு Reviewed by Author on October 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.