முல்லைத்தீவில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கம்பஹா பகுதியில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுடைய உறவினர்கள் சுமார் 220 பேர் அளவில் குறித்த முகாமில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக விடப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்றையதினம் (10) ஒரு தொகுதியினருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் நேற்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் வெலிகந்த மற்றும் அங்கொடை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன
இன்று தொற்றுக்குள்ளான 20 பெயரில் 7 ஆண்களும் 7 பெண்களும் 6 சிறுவர்களும் அடங்குவதாகவும் அவர்களை தொற்றுநோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிய முடிகிறது.
இதன்மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் 59 ஆவது படைப்பிரிவின் இராணுவ பயிற்சி முகாமில் நேற்றும் இன்றுமாக மொத்தம் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Reviewed by Author
on
October 11, 2020
Rating:

No comments:
Post a Comment