நடுவானில் திடீரென மோதிய விமானங்கள்! -சர்வதேச ஊடகங்கள் தகவல்
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், பிரான்ஸின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள லொச்சிஸ் நகரில் இருந்து இலகுரக விமானம் ஒன்று இரு பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்தது.
அதேவழியில் நாடியா செக்ஹயர் நகரில் இருந்து லொச்சிஸ் நகர் நோக்கி டி.ஏ40 என்ற மற்றுமொரு சுற்றுலா பயணிகள் விமானம் வந்து கொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக இலகுரக விமானமும், சுற்றுலா விமானமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.
நடுவானில் திடீரென மோதிய விமானங்கள்! -சர்வதேச ஊடகங்கள் தகவல்
Reviewed by Author
on
October 11, 2020
Rating:

No comments:
Post a Comment