அண்மைய செய்திகள்

recent
-

பிலிப்பைன்ஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் இந்தோனேசிய மீனவர்கள்

பிலிப்பைன்சில் செயல்படும் Abu Sayyaf எனும் தீவிரவாத அமைப்பின் பிடியில் உள்ள 4 இந்தோனேசிய மீனவர்கள் மீட்கப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் தரப்பு உறுதி அளித்துள்ளதாக இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் Retno LP Marsudi தெரிவித்துள்ளார்.

 அந்த அமைப்பின் பிடியிலிருந்த 1 இந்தோனேசிய மீனவர் பிலிப்பைன்ஸ் ராணுவத்துக்கும் அந்த அமைப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். இத்துப்பாக்கிச் சூடு சம்பவம் பிலிப்பைன்சின் Sulu மாகாணத்தில் உள்ள Patikul எனும் பகுதியில் நடந்தேறியிருந்தது. “4 இந்தோனேசிய பணயக்கைதிகள் தொடர்பாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.

பிலிப்பைன்ஸ் ராணுவம் அவர்களை கண்டறிந்து மீட்டுத் தருவதாகத் தெரிவித்திருக்கிறதன” எனக் கூறியுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் Retno LP Marsudi. கடந்த ஜனவரி 16ம் தேதி மலேசியாவின் சாபா மாநிலத்தின் கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுப்பட்டிருந்த 8 இந்தோனேசியர்கள் Abu Sayyaf அமைப்பினரால் கடத்தப்பட்டிருந்தனர்.

 அதில் 3 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் 5 பேர் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது அத்தீவிரவாத அமைப்பின் வசம் 4 பேர் பணயக்கைதிகளாக சிக்கியிருக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக இவ்வாறு 34 இந்தோனேசியர்கள் இந்த அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றனர்.

பிலிப்பைன்ஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் இந்தோனேசிய மீனவர்கள் Reviewed by Author on October 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.