முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இன்று(6) காலை முதல் வீதியால் வருவோர் இடைநிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டனர்.
இவ்வாறு முகக்கவசம் அணியாது செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவார்கள் எனவும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பாதசாரிகள், வாகன உரிமையாளர்கள், பேரூந்தில் பயணிப்பவர்கள், சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
இதே வேளை வீதியில் முகக்கவசம் இன்றி பயணித்தவர்கள் நிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு பணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வைத்தியசாலை, வங்கிகள், அரச திணைக்களங்கள், பேருந்து நிலையங்கள், உள்ளிட்ட பொது நிறுவனங்களில் தேவை நிமிர்த்தம் செல்லும் பொதுமக்கள் முகக்கவசங்களை அணிந்து வருமாறு மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்
.
.
முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை
Reviewed by Author
on
October 06, 2020
Rating:

No comments:
Post a Comment