தனிமைப்படுத்தலுக்குள்ளாகியுள்ள கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்!
கிழக்கு பல்கலைக்கழகத்தில் விடுமுறையில் வீடு சென்று திரும்பிய கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 61 மாணவர்கள் மட்டக்களப்பில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் நேற்று முதல் சுயதனிமைப்படுத்தப்பட்டு ள்ளதாகவும் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக உபவேந்தர் ஆர்.ராகல் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது கொரோன தொற்று உள்ள பிரதேசமாக கம்பஹா மாவட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனையிட்டு முன்னெச்சரிக்கை நடைவடிக்கையாக தற்போது விடுமுறையில் வீடு சென்று திரும்பிய கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 61 மாணவர்களை சுயதனிமைப்படுத்தியுள்ளோம். இதில் மருத்துவ பீடத்தில் கல்வி கற்றுவரும் 16 மாணவர்களை மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள பல்கலைக்கழக விடுதியிலும் ஏனைய 45 மாணவர்கள் வந்தாறு மூலையிலுள்ள பல்கலைக்கழக விடுதியிலும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தலுக்குள்ளாகியுள்ள கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்!
Reviewed by Author
on
October 06, 2020
Rating:

No comments:
Post a Comment