அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா பரவல் எதிர்கொள்ளும் மலையகம்

மலையக மக்கள் பொது சுகாதார செயற்பாடுகளின் கீழ் அல்லது கொரொனா சட்ட மூலத்தின் கீழ் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உமா பவுண்டேஷன் நிறுவுனர் எம் . தீபன் தெரிவிக்கிறார் .

 மலையகத்தில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது இவ் கொரோனா தெற்று . தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இவ் கொரோனா மலையகத்தில் பெரும் நெருக்கடியான கொரொனாவின் 2ஆம் கட்ட அலை என்பது மலையகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது . கூறிப்பாக மலையக மக்கள் வாழ்கின்ற குடியிருப்புகள் மிக நெருக்கமாக இருப்பதும் மலையக மக்கள் வாழ்கின்ற லய அறைகள் போதிய இட வசதிகளை கொண்டு இல்லாமலும் மலையகத்திலே பொது சுகாதார கட்டமைப்பு என்பது முழுமையாக உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஏற்படுகின்றன . 

 இவ் மக்கள் வாழ்கின்ற அனைத்து குடியிருப்புகளும் 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது . பொதுவான மலசலகூட பாவனை காணப்படுகின்றது . எனவே கொரொனா பாதிப்பினால் ஒரு குடும்பத்திலே ஒருவர் பாதிக்கப்படுகின்ற போது அவரை தனிமைப்படுத்துவதற்கான தனி அறைகள் அப்படியான வாய்ப்புகளோ காணப்படுவது இல்லை . என்று உமா பவுண்டேஷன் நிறுவுனரும் சமூகசேவையாளர் எம் . தீபன் தெரிவித்துள்ளர்.

கொரோனா பரவல் எதிர்கொள்ளும் மலையகம் Reviewed by Author on November 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.