சுகாதார அறிவுறுத்தல்களை சரியாக பின்பற்ற மக்கள் பழக்கப்பட வேண்டும்-கோட்டாபய ராஜபக்
ஆனால் மக்கள் இந்த விடயத்தை அவதானமாக கடைபிடிக்க வேண்டும்.
நாளாந்தம் உழைத்து வாழ்கின்றவர்கள் தொடர்பாக நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாட்டை முடக்கினால் அவ்வாறான நாளாந்த உழைப்பாளர்கள் மீண்டும் தங்களது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதற்கு பல வருடங்கள் செல்லும்.
ஜனாதிபதியானாலும், அமைச்சர்களானலும் யாராக இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து தற்போது ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினையை தீக்க முயற்சிக்க வேண்டும்.
நாட்டை முடக்க முடியாது.
நாட்டை திறந்து வைப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும்.
பாடசாலைகளை இலகுவதாக மூடுவதற்கு உத்தரவிட முடியும்.
ஆனால் பாடசாலைகளை மூடிவைப்பதன் மூலம் ஏற்படுகின்ற விளைவுகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.
நாட்டை முடக்கி வைப்பதன் மூலம் பெரும் பொருளாதார பின்னடைவு உள்ளிட்ட பல சிக்கல்கள் எழும்.
அதனை தடுப்பதற்கு, சரியான முறையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மக்களை வாழப்பழக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
சுகாதார அறிவுறுத்தல்களை சரியாக பின்பற்ற மக்கள் பழக்கப்பட வேண்டும்-கோட்டாபய ராஜபக்
Reviewed by Author
on
November 04, 2020
Rating:

No comments:
Post a Comment