நியூசிலாந்து ஆக்லாந்து நகரத்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்
இந்திரா பத்மநான் அவர்கள் ஒருங்கிணைத்தார். மாவீரர்களை. நெஞ்சிருத்திய நடனங்கள் மற்றும் கவிதைகளை
இளயதலைமுறைச் சிறார்கள் நிகழ்தினார்கள். வைத்தியக்கலாநிதி வசந்தன் அவர்களின் சிறப்புரையும் செயற்பாட்டாளர் குருபரன் அவர்களின் உரையும் இடம்பெற்றது.
சிறப்பு அழைப்பாளராக நியூசிலாந்து அகதிகள் மற்றும் கலாச்சார அமைப்புகளின் இயக்குனர் மதிப்பிற்குரிய திரு அகிலிலு அவர்கள் சிறப்புரையாற்னினார் . அவர் தனது உரையில் தான் எரித்திரிய நாட்டைச்சேர்ந்தவரென்றும் அதனால். ஈழத்தமிழர்களினதும் எமது விடுதலைப்போராட்டினதும் உணர்வுகளை தங்களால் உணரமுடியுமென்றும் கூறினார். நாம்தமிழர் அமைப்பின் நியூசிலாந்திற்கான அமைப்பாளர்
பிரதீப் அவர்களின் உணர்வான உரையும் இடம்பெற்றது.
நியூசிலாந்து ஆக்லாந்து நகரத்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்
Reviewed by Author
on
November 27, 2020
Rating:

No comments:
Post a Comment