நிவர் புயல் குறித்து வைரமுத்து! கவிதை
நிவர் புயல் குறித்து திரையுலகைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ருவிட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் கவிஞர் வைரமுத்து பதிவு செய்துள்ள கவிதை ஒன்று வைரலாகி வருகின்றது.
புயலே
போய்விடு
பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்
வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்
குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்
பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்
சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு
ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
நிவர் புயல் குறித்து வைரமுத்து! கவிதை
Reviewed by Author
on
November 26, 2020
Rating:
Reviewed by Author
on
November 26, 2020
Rating:


No comments:
Post a Comment