அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நறுவிலிக்குளம் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க கோரி செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கடற்தொழில் அமைச்சருக்கு அவசர கடிதம்.

மன்னார் நறுவிலிக்குளம் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதார். இவ் விடையம் தொடர்பாக அவர் இன்று செவ்வாய்க்கிழமை(3) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,, மன்னார் நறுவிலிக்குளம் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நறுவிலிக்குளம் அன்னை வேலாங்கண்ணி மீனவர் கூட்டுறவு சங்கம் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

 அவர்கள் கடற்தொழிலை மேற்கொண்டு வரும் பகுதியில் போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் அவர்களின் மீன் பிடி படகுகளை நிறுத்தி வைப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். குறித்த பகுதிக்கு நேரடியாக சென்று அவர்களின் பிரச்சினைகளை அவதானித்தேன். குறித்த மீனவர்களின் படகுகள் கப்பல்துறை செல்லும் கடற்கரை பகுதி , கடல் மற்றும் நீரோடையில் மணலாக காணப்படுகின்றது.நீரோடையில் நீர் வற்றினால் அவர்கள் சுமார் 200 மீற்றர் தூரம் தமது படகுகளை இழுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சில மீனவர்கள் தமது படகுகளை கடலிலும்,கடற்கரையிலும்,அருகில் உள்ள புதர்களிலும் தமது படகளை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

 இதனால் பல கடகுகளுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மீனவர்கள் தமது படகுகளை நிறுத்தும் இடம் போதுமானதாகவும், பொருத்தமானதாகவும் இல்லாத நிலை காணப்படுகின்றது.மேலும் குறித்த மீனவர்கள் கடல் அட்டை மற்றும் சங்க வியாபாரத்தை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.இந்த பகுதி மக்கள் அதிகமாக மீனவர்களாகவே உள்ளனர். அவர்களின் வாழ்வாதாராம் அன்றாட மீன் பிடி நடவடிக்கை மூலமே இடம் பெற்று வருகின்றது. எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய உடனடியாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் நறுவிலிக்குளம் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க கோரி செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கடற்தொழில் அமைச்சருக்கு அவசர கடிதம். Reviewed by Author on November 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.