அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சாயிட் சிட்டி பகுதியில் 721 கிலோ மஞ்சள் மூடைகளுடன் இருவர் கைது.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு பதுக்கி வைக்கபட்டிருந்த 721 கிலோ 500 கிராம் மஞ்சள் மூட்டைகள் மற்றும் 3 கிலோ 730 கிராம் கஞ்சா தம்வசம் வைத்திருந்த குற்றசாட்டின் பெயரில் மன்னார் சாயிட் சிட்டி பகுதியை சேர்ந்த இருவர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய படகும் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் பொலிஸார மீட்டுள்ளதோடு, சந்தேக நபர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாயிட் சிட்டி பகுதியில் இருந்து மன்னார் ஊழல் தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கு அமைவாக கடற்படையுடன் இணைந்து குறித்த மஞ்சல் மற்றும் கஞ்சா மூடைகள் மீட்கப்பட்டுள்ளது. மேற்படி கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் பணிப்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் காஸ்தூரி ஆராட்சியின் ஆலோசனையில் மன்னார் பொலிஸ் பொறுப்பதிகாரி C.P.ஜயதிலகவின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க தலைமையிலான பொலிஸ் பிரிவினரே மேற்படி மஞ்சல் மற்றும் கஞ்சாவை கைப்பற்றி உள்ளனர். 

 மேலும் மன்னார் சாயிட் சிட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளானர். மேலதிக விசாரணையின் பின்னர் கைப்பற்றப்பட்ட மஞ்சல் மற்றும் சந்தேக நபர்கள் இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.




மன்னார் சாயிட் சிட்டி பகுதியில் 721 கிலோ மஞ்சள் மூடைகளுடன் இருவர் கைது. Reviewed by Author on November 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.