தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்திய கடலோர காவல் படையினரால் பறிமுதல்
இதனையடுத்து கடலோர காவல் படையினர் அதனை மீட்டு மண்டபம் கடலோர காவல் படை முகாமுக்கு எடுத்து வந்து சோதனை செய்ததில் மூட்டையில் 1200 மருந்து அட்டைகளில் மொத்தமாக 6 ஆயிரம் மருந்து பாட்டில்கள் இருந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட மருந்து குறித்து மருத்துவத்துறையினரிடம் விசாரித்த போது இந்த மருந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன் படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இலங்கையில் இந்த மருந்து கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளதால் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்த பதுக்கி வைத்திருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மருந்தின் சர்வதேச இலங்கை ரூபாயின் மதிப்பு சுமார் 14 இலட்சம் என இருக்கலாம் என இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்திய கடலோர காவல் படையினரால் பறிமுதல்
Reviewed by Author
on
November 20, 2020
Rating:
Reviewed by Author
on
November 20, 2020
Rating:





No comments:
Post a Comment