இளைஞன் ஒருவன் அடித்துப் படுகொலை
சம்பவம் இடம்பெற்ற நேற்று இரவு உடப்பு நகரில் உயிரிழந்த நபருடைய சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற இளைஞனுக்கும், மேலும் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதுடன், அங்கிருந்த இருவர் குறித்த இளைஞன் மீது கடுமையாக தாக்கி படுகொலை செய்துள்ளதாக உடப்பு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.ஜி.சீ.ஆர்.குணதிலக தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் இருவரும் சம்பவம் இடம்பெற்ற போது மதுபோதையில் இருந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த உயிரிழந்த இளைஞனின் சகோதரன் தற்போது உடப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த நபரின் சடலம் நீதிவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் இருவர் உடப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளளனர்.
இக்கொலை சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.ஜி.சீ.ஆர்.குணதிலக தலைமையிலான பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞன் ஒருவன் அடித்துப் படுகொலை
Reviewed by Author
on
November 05, 2020
Rating:

No comments:
Post a Comment