மன்னார் கல்வி வலயத்தில் பல முறைகேடுகள். கல்வி அமைச்சில் முறையிட்டும் பயனில்லை.
ஆபத்து நிறைந்த நெருக்கடியான இந்த சூழ்நிலையில் மன்னார் கல்வி வலயத்தில் பல்வேறு முறையற்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சிற்கும், கல்வித் திணைக்களத்திற்கும் தெரியப்படுத்தியும் எந்தப் பிரயோசனமும் இல்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் விசனம் தெரிவித்துள்ளது.
சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.
வடக்கு மாகாணத்திற்கு முன்னிலை பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுக்கும் மன்னார் கல்வி வலயத்தை இதுவரை நிர்வகித்த பணிப்பாளர்கள் பல்வேறுநலன் சார்ந்து தொழிற்பட்டனர். தற்போதுள்ளவர் அத்துறைசார் அனுபவம் இல்லாதவர் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தற்போதுள்ள பணிப்பாளர் தான் நினைத்ததை மட்டும் செய்வதில் ஆர்வமாக உள்ளதோடு இடமாற்றங்களையும், நியமனங்களையும் தனது விருப்பத்திற்கு ஏற்ப செய்து வருகின்றார். ஏழுவருடங்கள் நிறைவுசெய்த ஆசிரியர்களை கண்துடைப்பிற்காக வேறுபாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கி ஒரு சிலரை மீண்டும் அதே பாடசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அண்மையில் ஒரு பாடசாலையின் அதிபர் விவகாரத்தில் நீதிமன்றம் தலையீடு செய்தமை குறிப்பிடத்தக்க நிகழ்வு.
அதிபர் நியமனங்களில் சட்டத்திற்கும் சுற்று நிருபங்களுக்கும் முரணாக வலயக் கல்விப்பணிப்பாளர் செயற்படுவது வடக்கு மாகாண கல்வி அமைச்சை மிஞ்சிய செயற்பாடாக இருப்பதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மன்னார் கல்வி வலயத்தில் பல முறைகேடுகள். கல்வி அமைச்சில் முறையிட்டும் பயனில்லை.
Reviewed by Author
on
November 02, 2020
Rating:

No comments:
Post a Comment