அண்மைய செய்திகள்

recent
-

நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு மஞ்சள் அனர்த்த எச்சரிக்கை

நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு மஞ்சள் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, எஹெலியகொடை, எலபாத்த, குருவிட்ட ஆகிய பிரதேசங்களுக்கு
ம், கேகாலை மாவட்டத்தில் ரூவான்வெல்ல பிரதேச பிரிவுக்கும் இவ்வாறு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இந்த பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையை கவனத்தில் கொண்டு இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரதேசங்களில் தற்போது நிலவும் காலநிலையை கவனத்திற்கொண்டு முதற் கட்ட மஞ்சள் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவத்தின் பொது முகாமையாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

 மேலும் அனர்த்தங்கள் தொடர்பாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 177 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் அனர்த்த நிலை தொடர்பான தகவல்களுக்காக எந்த நேரத்திலும் பொதுமக்களால் தொடர்புகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்


.
நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு மஞ்சள் அனர்த்த எச்சரிக்கை Reviewed by Author on November 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.