உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 110 டொலராக உயர்வு
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலுக்கு அருகிலுள்ள ஈரானிய எரிசக்தி மையம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 110 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை கடந்த செவ்வாய்க்கிழமை நிலவிய விலையை விட 5% க்கும் அதிகமாக உயர்ந்து, 109.91 டொலர்களாக பதிவாகியுள்ளது. இருப்பினும், சிறிது நேரத்தின் பின்னர் விலையில் சிறிய சரிவு ஏற்பட்டது. அதேவேளை, பிரித்தானியாவின் இயற்கை எரிவாயு விலையும் 6% ஆல் அதிகரித்துள்ளது.
ஈரானின் 'தெற்கு பார்ஸ்' எரிவாயு வயலுக்குச் சொந்தமான பெட்ரோ கெமிக்கல் வளாகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்தே இந்த விலை உயர்வு ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து, ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கட்டாரின் ராஸ் லாஃபான் தொழில் மண்டலமும் பலத்த சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் இவ்வாறு திடீரென உயர்ந்த போதிலும், இந்த மோதல் காலத்தில் பதிவான உச்சகட்ட விலையை விட இவை இன்னும் குறைந்த மட்டத்திலேயே உள்ளன. இதற்கு முன்னர் மார்ச் 9 ஆம் திகதி மசகு எண்ணெய் விலை 116.78 டொலர்களாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது
Reviewed by Vijithan
on
March 19, 2026
Rating:
.jpg)

No comments:
Post a Comment