அண்மைய செய்திகள்

recent
-

ஐந்து மாதங்களின் பின் மசகு எண்ணை விலையில் கடும் வீழ்ச்சி

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உலகளாவிய ரீதியில் மோசமாகத் தாக்கி வரும் நிலையில் ஐந்து மாதங்களின் பின்னர் தற்சமயம் மசகு எண்ணை விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இங்கிலாந்து பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் கொரோனா தொற்றுக்கு எதிராக கடுமையாக போராடி வரும் நிலையில் சமூகக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன.

 புதிய முடக்கல் கட்டுப்பாடுகள் நாடுகளின் பொருளாதாரங்களை கடுமையாக பாதித்துள்ளதுடன் மசகு எண்ணையின் விலையிலும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதால் பொருட்களின் விலைகள் மற்றும் பங்குச் சந்தை நிலைவரங்கள் விளிம்பு நிலையில் உள்ளன. ஆசிய சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணையின் விலை நேற்று 35.74 அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளன. எண்ணை விலைக்கான முக்கிய அளவு கோல் (The price of Brent) இந்த வருட ஆரம்பத்தில் இருந்து 45 சதவீதம் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஐந்து மாதங்களின் பின் மசகு எண்ணை விலையில் கடும் வீழ்ச்சி Reviewed by Author on November 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.