அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்நாட்டின் காரைக்கால் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற 32 மீனவர்கள் காணாமல்போயுள்ளனர்.

தமிழ்நாட்டின் காரைக்கால் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற 32 மீனவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் தமிழக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது. 

 இந்நிலையில் காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் ஆர்.கவியரசன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 192 மீன்பிடி விசை படகுகளில் 102 படகுகள் பாதுகாப்பாக காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தன. 67 மீன்பிடி படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றடைந்தன.

 23 மீன்பிடி படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டியிருந்தது. அதில் 7 படகுகள் ஆங்காங்கே கரை திரும்பிய நிலையில் மீதமுள்ள 16 படகுகளில் 14 படகுகள் காரைக்கால் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. எஞ்சிய 2 படகுகளில் சென்ற 32 மீனவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் 32 மீனவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் காரைக்கால் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற 32 மீனவர்கள் காணாமல்போயுள்ளனர். Reviewed by Author on November 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.