அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன பதவியேற்பு

இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன, இன்று பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சுமார் ஒன்றரை வருடங்களாக வெற்றிடமாக இருந்த பொலிஸ்மா அதிபர் பதவிக்கு, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் பரிந்துரைக்கப்பட்டார். 

 மேலும் நாடாளுமன்ற பேரவையிலும் ஜனாதிபதியின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்தே 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, 34ஆவது பொலிஸ்மா அதிபர் தெரிவின்போதும் சி.டி.விக்கிரமரத்னவின் பெயர் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவினால் அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் அதன்போது சிரேஷ்டத்துவத்தில் 3ஆவது இடத்தில் அவர் இருந்த நிலையில், பூஜித் ஜயசுந்தர அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன பதவியேற்பு Reviewed by Author on November 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.