காரை ஓட்டிச் சென்றவருக்கு திடீர் சுகயீனம்! கரை ஓரத்தில் நிறுத்தி விட்டு உயிரிழந்த சோகம்
இந்த நபர் தனது மனைவி மற்றும் சித்தி சகிதம் தொம்பே கிம்புல்விலவத்த பிரதேசத்திலுள்ள தனது வீட்டிலிருந்து சென்றுகொண்டிருக்கும் போது திடீரென சுகயீனமுற்றதையடுத்து காரை வீதியோரத்தில் நிறுத்திய பின்னர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
தொம்பே கிம்புல்விலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த வீ. சீ .டி ரஸல் கிரிஸ்டோபர் த அல்விஸ் (64) மரணமடைந்த நபர் சுகயீனமுற்று சிகிச்சை பெற்றுவந்துள்ளதால் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.ஜே.எம்.ஆர் சமரசிங்க மேற்கொண்டுள்ளார்.
காரை ஓட்டிச் சென்றவருக்கு திடீர் சுகயீனம்! கரை ஓரத்தில் நிறுத்தி விட்டு உயிரிழந்த சோகம்
Reviewed by Author
on
November 28, 2020
Rating:

No comments:
Post a Comment