கள்ள நோட்டுக்களுடன் தொடர்புடைய மூவர் கைது
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மருத்துவர் எனத் தெரிவித்த பொலிஸார், அவரிடம் இருந்து வெவ்வேறு பெயர்களில் தயாரிக்கப்பட்ட ஏழு மருத்துவர்களின் றப்பர் முத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், ஊசி மருந்துகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவித்தனர்.
கள்ளநோட்டுக்களை வவுனியாவில் உள்ள நபர் ஒருவரிடம் கொடுத்து அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்கு முயற்சித்த வேளையிலே மூவரும் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொட்டகலை, அனுராதபுரம் மற்றும் மொனராகலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.
கள்ள நோட்டுக்களுடன் தொடர்புடைய மூவர் கைது
Reviewed by Author
on
November 20, 2020
Rating:
Reviewed by Author
on
November 20, 2020
Rating:


No comments:
Post a Comment