மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள ஐஸ் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு- கல்லடி பாலத்திற்கு அருகில் நீண்டகாலமாக கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஐஸ் தொழிற்சாலையிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த ஐஸ் தொழிற்சாலை மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு அருகில் 2009ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு செயற்பட்டுவந்த நிலையில், கடந்த 5வருடத்திற்கு மேலாக கைவிடப்பட்ட நிலையில் இருந்து வருகின்றது.
இந்நிலையில் இந்த ஐஸ் தொழிற்சாலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகவும் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
நேற்று மாலையும் பலத்த மழைக்கு மத்தியிலும் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீயினை மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.
குறித்த பகுதிக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், மாநகர ஆணையாளர் மா.தயாபரன் மற்றும் உறுப்பினர்கள் தீயணைக்கும் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
இவ்விடயம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment