அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரசபை சுத்திகரிப்பு பணியாளர்களுக்கான மழை கவசங்கள் மற்றும் சீருடைகள் வழங்கி வைப்பு

மன்னார் நகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கான விசேட மழை கால பாதுகாப்பு உடைகள் மற்றும் சீருடைகள் மன்னார் நகர சபையின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் நகர சபை தலைவர் மற்றும் செயளாலரால் இன்று காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது மன்னார் மாவட்டத்தில் மழையான கால நிலை நீடித்து வருகின்றமையால் நகர சபை ஊடாக துப்பரவு மற்றும் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கான மழை கவசங்கள் உட்பட பாதுகாப்பு கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

 தொடர்சியாக மழை காலங்களின் அதிகளவான துப்பரவு பணிகள் மற்றும் கால்வாய்கள் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதனால் மழை நேரங்களிலும் நகர சபை தூய்மை படுத்தல்பணிகளை மேற்கொள்ளும் முகமாக மேற்படி பாதுகாப்பு கவசங்கள் வழங்கிவைக்கப்படமை குறிப்பிடதக்கது.





மன்னார் நகரசபை சுத்திகரிப்பு பணியாளர்களுக்கான மழை கவசங்கள் மற்றும் சீருடைகள் வழங்கி வைப்பு Reviewed by Author on December 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.