அண்மைய செய்திகள்

recent
-

வறுமையால் 5 குழந்தைகளை கால்வாயில் வீசிக் கொன்ற தந்தை!

பாகிஸ்தானில் வறுமை காரணமாக தந்தையே 5 குழந்தைகளை கால்வாயில் வீசிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் லாகூரில் வசித்து வரும் அந்த நபர் வீட்டில் வறுமை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனிடையே இன்று தனது மனைவியுடன் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த அந்த நபர் தன்னுடைய 5 குழந்தைகளை பட்டோகியில் உள்ள ஜம்பர் கால்வாயில் தூக்கி வீசியுள்ளார்.

 தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கால்வாயில் விழுந்த குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை ஒரு வயது அகமத் மற்றும் நான்கு வயது பிஷா ஆகியோரின் சடலங்களை மட்டுமே மீட்டுள்ளனர். மேலும் மூன்று குழந்தைகளை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வறுமை காரணமாக தந்தையே தான் பெற்ற 5 குழந்தைகளையும் கால்வாயில் தூக்கி வீசி எரிந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வறுமையால் 5 குழந்தைகளை கால்வாயில் வீசிக் கொன்ற தந்தை! Reviewed by Author on December 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.