அண்மைய செய்திகள்

  
-

புரவி புயலால் முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

வங்காள விரிகுடாவில் உருவாகிய “புரவி” புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த புயல் முல்லைத்தீவில் பாரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகப்படியாக 402 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்தோடு காற்றுடன் கூடிய மாழையினால் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அதிகப்படியாக துணுக்காய் மாந்தை கிழக்கு பிரதேசங்களிலேயே இந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் குறித்த பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலே நேற்று மாலை 4.30 மணிவரையான தகவல்களில் அடிப்படையில் 601 குடும்பங்களை சேர்ந்த 1796 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் இ.இலிங்கேஸ்வரகுமார் தெரிவித்தார். 

இதனடிப்படையில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 210 குடும்பங்களை சேர்ந்த 533 பேரும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 181 குடும்பங்களை சேர்ந்த 619 பேரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 43 குடும்பங்களை சேர்ந்த 143 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த20 பேரும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 123 குடும்பங்களை சேர்ந்த 384 பேரும் மணலாறு பிரதேச செயலாளர் பிரிவில் 34 குடும்பங்களை சேர்ந்த 97 பேருமாக மொத்தமாக 601 குடும்பங்களை சேர்ந்த 1796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புரவி புயலால் முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு! Reviewed by Author on December 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.