மின்னல் தாக்கி பசு மாடுகள் பரிதாபமாக பலி!
ஞாயிறு மாலை வேளையில் மாடுகளை அடைத்துவிட்டு திங்கள் காலையில் சென்று பார்த்த போது சுமார் ஒன்பது மாடுகள் இறந்து காணப்பட்டதாக பண்ணையாளர் பஞ்சாயுதம் தெரிவித்தார்.
மேற்படி மாடுகள் மயிலத்தமடு மேய்ச்சல் தரைப் பிரதேசத்திலே பாராமரிக்கப்பட்டு வந்தன.
அண்மையில் மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபையினால் சோளப் பயிர் செய்கைக்கு மேய்ச்சல் தரைப்பகுதி வழங்கப்பட்டு இருப்பதன் காரணமாக தற்பொழுது அப்பகுதியிலிருந்து பண்ணையாளர்கள் அனைவரும் வெளியேறிய நிலையில் தொப்பிகல, மியான்கல் குளம், தரவை, குடும்பிமலை, ஈரலக்குலம் போன்ற பகுதிகளில் கால்நடைகளை கொண்டு வந்துள்ளனர்.
உயிரிழந்த மாடுகளை பண்ணையாளர்கள் குறித்த இடத்தில் குழிதோண்டி புதைத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக உரிமையாளர் கரடியனாறு மிருக வைத்தியசாலை வைத்திய அதிகாரியிடம் அப்பகுதி கிராமசேவகரிடமும் கரடியனாறு போலீசாரிடமும் தெரியப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
தங்களுடைய கால்நடைகளை வளர்க்க முடியாத நிலைமையில் முன்னைய பகுதியில் இருந்து வெளியேறிய இவ்வாறான பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
மின்னல் தாக்கி பசு மாடுகள் பரிதாபமாக பலி!
Reviewed by Author
on
December 07, 2020
Rating:

No comments:
Post a Comment