பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல், ஊரடங்கிற்கு தேவை ஏற்படாது
இதுதொடர்பாக கொவிட் - 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணு தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கையில், கடந்த 51 நாட்களாக முடக்கப்பட்டிருந்த சில வீடமைப்புத் திட்டங்களில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட ஆறு வீடமைப்புத் தொகுதிகள் சார்ந்த பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலாகிறது.
அந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனை பெறுபேறுகளுக்கு அமைய எதிர்காலத்தில் அவற்றையும் நீக்குவது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்
.
.
பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல், ஊரடங்கிற்கு தேவை ஏற்படாது
Reviewed by Author
on
December 12, 2020
Rating:

No comments:
Post a Comment