அண்மைய செய்திகள்

recent
-

நத்தார் பண்டிகை ஆராதனைகளில் பங்குகொள்ள 25 பேருக்கு மாத்திரம் அனுமதி

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலனியின் அவசர கூட்டம் நேற்று மாவட்ட வெயலகத்தில் மவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருநாகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பண்டிகைகாலங்களில் மக்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பாகவே ஆராயப்பட்டது. நத்தார் பண்டிகை அதனை தொடர்ந்து புத்தாண்டு அதன்பின் பொங்கல் பண்டிகை என தொடர்ச்சியாக பண்டிகை காலமாகையினால் மக்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து மிக அவதானத்துடன் செயல்படும்படி அரசாங்க அதிபர் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

 தேவாலயங்களுக்கு நத்தார் பண்டிகை விசேட ஆராதனைகளில் 25பேர் மாத்திரம் கலந்து கொள்ளமுடியும், அங்கு வருகின்றவர்கள் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும் அவ்வாறு சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்பவர்களை அவதானிப்பதற்கு பொலிஸ் விசேடகுழுவினருடன் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைக்கப்பட்டுள்ளனர், பண்டிகை காலங்களில் பொருட்களை கொள்வனவு செய்யவுள்ள மக்கள் கடைசிவரை காத்திருக்காது மக்கள் நெரிசல் ஏற்படாதவகையில் செயல்படுவது அவசியமாகும். கடை உரிமையாளர்கள் கவனமாக வடிக்கையாளர்களை சுகாதார நடைமுறைகளுடன் நடத்துவது அவசியமானது என சுகாதாரத்துறையினர் மக்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கிவருகின்றனர்.

நத்தார் பண்டிகை ஆராதனைகளில் பங்குகொள்ள 25 பேருக்கு மாத்திரம் அனுமதி Reviewed by Author on December 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.