தடுப்பூசி நாளை காலை 11.00 மணிக்கு இலங்கைக்கு
இதனைத்தொடர்ந்து இந்த தடுப்பூசிகளை ,சுகாதார அமைச்சின் குளிரூட்டப்பட்ட களஞ்சிய பகுதிக்கு எடுத்துச்செல்லப்படும். வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்த தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த தடுப்பூசி தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று காலை இடம்பெற்றது.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவும் நீண்ட கால நல்லுறவின் முக்கியத்துவம் தொடர்பை குறிக்கும் வகையில் இந்த தடுப்பூசியை ஜனாதிபதி இந்த வைபவத்தில் பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கையில் உள்ள இந்திய தூதுவரினால் இந்த தடுப்பூசி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இதன் பின்னர் இந்த தடுப்பூசிகள் சுகாதார அமைச்சில் உள்ள குளிரூட்டல் களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்படும். இவற்றை இலகுவாக கையாளக்கூடியதாக இருக்கும். நாளை மறுதினம் முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தடுப்பூசி நாளை காலை 11.00 மணிக்கு இலங்கைக்கு
Reviewed by Author
on
January 27, 2021
Rating:
Reviewed by Author
on
January 27, 2021
Rating:


No comments:
Post a Comment