சட்டவிரோத மண் அகழ்வு; 7 பேர் கைது
வனப்பகுதியில் அகழப்படுகின்ற மண், பிரதேசத்திலுள்ள சட்டவிரோத மணல் ஏற்றும் இடமொன்றுக்கு கொண்டு செல்லப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போலியான மண் அகழ்வு அனுமதிப்பத்திரமொன்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
தெதுரு ஓயா நீர்த்தேக்க வனப்பகுதியில் மண் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம் தமது காரியாலயத்தினூடாக விநியோகிக்கவில்லை என தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர் சம்பத் சமரஜீவ தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சட்டவிரோத மண் அகழ்வு; 7 பேர் கைது
Reviewed by Author
on
January 27, 2021
Rating:
Reviewed by Author
on
January 27, 2021
Rating:


No comments:
Post a Comment