வடமாகாண தனியார் கல்வி நிலையங்களை திறக்க அனுமதி; சுற்றறிக்கை வெளியீடு
மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வடக்கு மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பிரேத்தியேக வகுப்புகளை நடத்தவேண்டும்.
அத்துடன், ஒவ்வொரு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியும் தனியார் கல்வி நிலையங்களில் கொவிட் -19 சுகாதார நடைமுறைகள் பின்பற்றுவதனை கண்காணிப்பாளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஒரு வகுப்பில் இருக்கைகளின் திறனில் 50 சதவீதம் வரை அல்லது அதிகபட்சம் 100 மாணவர்களுக்கு மட்டுமே இடமளிக்க முடியும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமாகாண தனியார் கல்வி நிலையங்களை திறக்க அனுமதி; சுற்றறிக்கை வெளியீடு
Reviewed by Author
on
January 25, 2021
Rating:
Reviewed by Author
on
January 25, 2021
Rating:


No comments:
Post a Comment