அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் கடும் மழை: புலிபாய்ந்தகல்லுக்கு படகுச் சேவை

மட்டக்களப்பில் பெய்து வரும் மழையினால் சில பகுதிகளில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கிரான், புலிபாய்ந்தகல் பாலத்தை ஊடறுத்து வௌ்ளம் பாய்வதால் அந்த வீதியூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரான் பாலத்திலிருந்து புலிபாய்ந்தகல் கிராமத்திற்கு செல்வதற்கு இன்று முதல் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரும், கடற்படையினரும், பிரதேச செயலக அதிகரிகளும் இணைந்து இந்த படகு சேவையை முன்னெடுத்துள்ளனர். 

 அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மாத்திரம் குறைந்தளவான பொதுமக்கள் படகில் பயணிப்பதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இதனிடையே, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட சித்தாண்டி – சந்தனமடு ஆறு பெருக்கெடுத்துள்ளது. இதனால், சித்தாண்டியில் வேளாண்மை நிலம், தாழ்நிலப் பிரதேசங்களில் வௌ்ளம் நிறைந்துள்ளது. சித்தாண்டி மாரியம்மன் ஆலய வளாகத்திலும் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் கடும் மழை: புலிபாய்ந்தகல்லுக்கு படகுச் சேவை Reviewed by Author on January 03, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.