அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு நகர் மற்றும் காத்தான்குடி வணிக தொழிலாளர்கள் கொத்தணி கொரோனா சிகிச்சை முடிவடைந்து வீடு சென்றனர்.

கடந்த 30.12.2020 அன்று மட்டக்களப்பு நகர் மற்றும் காத்தான்குடி வணிக நிலையங்களில் தொழில் புரிவோருக்கு எழுந்தமானமாக மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் நோயாளிகளாக அடையாளங்கண்ட நபர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

 அவர்களில் கரடியனாறு சிகிச்சை நிலையத்திலிருந்து இன்று (13.01.2021) சிகிச்சை முடிவடைந்து 47 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் பலர் கடந்த 10.01.2021 அன்று தானாக முன்வந்து வைத்தியசாலை வளாகத்தினுள் பாரிய சிரமதானம் ஒன்றினை மேற்கொண்டு மரக்கன்றும் நட்டு வைத்தனர். சில நோயாளிகள் இங்கு வழங்கப்படும் உணவு தரம் குறைவு என்று முறைப்பாடுகளை முன்வைத்தும் முகநூல் பக்கங்களில் இட்டும் இருந்தனர். 

இது பற்றி சுகாதார ஊழியர்களிடம் வினவியபோது: முடியுமானவரை தரமான உணவுகள் வழங்கப் படுகிறது என்றும் அவ்வுணவையே வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களும் கடமை நேரத்தில் உண்பதாகவும், உணவு பரிசீலிக்கப்பட்டே நோயாளிகளுக்கு வழங்கப் படுவதாகவும், நோயாளிகளில் ஒரு சிலர் மட்டுமே பிரச்சனை உண்டுபண்ணும் நோக்கத்தோடு இவ்வாறு செயற்படுவதாகவும் அறியமுடிகின்றது. அதுமட்டுமன்றி உணவு தரத்தை கண்காணிக்க மேலும் ஒரு பொறிமுறையை மேலதிகமாக செயற்படுத்த சுகாதார தரப்பினர் முடிவெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 - மட்டு கதிர் -


மட்டக்களப்பு நகர் மற்றும் காத்தான்குடி வணிக தொழிலாளர்கள் கொத்தணி கொரோனா சிகிச்சை முடிவடைந்து வீடு சென்றனர். Reviewed by Author on January 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.