இலங்கைக்கு அருகில் உருவானது புயல்
இலங்கைக்கு அருகில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27) சற்று நேரத்துக்கு முன்னர் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயலுக்கு ‘தித்வா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
யேமன் நாடால் பரிந்துரைக்கப்பட்ட இந்த பெயர், உலக வளிமண்டலவியல் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் வெப்பமண்டல புயலுக்கான குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளால் தயாரிக்கப்பட்ட முன் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ளடங்கியுள்ளது.
இலங்கைக்கு அருகில் உருவானது புயல்
Reviewed by Vijithan
on
November 27, 2025
Rating:
Reviewed by Vijithan
on
November 27, 2025
Rating:


No comments:
Post a Comment