அண்மைய செய்திகள்

recent
-

கிண்ணியாவில் டைனமைட்டுடன் ஆயுர்வேத வைத்தியர் உள்ளிட்ட இருவர் கைது!

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் டைனமைட் மற்றும் சேவா நூலுடன் ஆயுர்வேத வைத்தியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 37 டைனமைட் குச்சுகளும் டைனமைட்டை வெடிக்க வைக்கும் 372 அடி சேவா நூலும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

 அண்ணல் நகர், கிண்ணியா-3 பிரதேசத்தைச்சேர்ந்த 44 வயதான ஆயுர்வேத வைத்தியரும், ஜாவா நகர், கிண்ணியா-6 ஜ சேர்ந்த 41 வயதான மீனவர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் பயங்கரவாத செயற்பாட்டிற்காக கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் இதன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கிண்ணியாவில் டைனமைட்டுடன் ஆயுர்வேத வைத்தியர் உள்ளிட்ட இருவர் கைது! Reviewed by Author on February 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.