அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

புதிதாக அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு இராஜாங்க அமைச்சர் விசேட நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கடந்த 3, 4 நாட்களாக நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்ததாக அவர் கூறினார். ஜனவரி இறுதி மற்றும் பெப்ரவரி முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் 6.5 வீதமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டபோதும் தற்போது அந்த எண்ணிக்கை 4 அல்லது 4.5 வீதமாக குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

 கடந்த நாட்களில் கொழும்பு மாவட்டம் மற்றும் கொழும்பு நகரில் பெருமளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர், எனினும் தற்போது அந்த நிலைமையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறிய விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, தற்போது மக்கள் பொறுப்புடன் செயற்படுவதால், நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

 மேலும் தடுப்பூசிகள் தடுப்பூசிகள் வழங்கப்படுவதால், மேலும் தொற்று பரவுவது குறைவடைந்துள்ளதாக எண்ண முடியாது என்றார். இவ் வார இறுதியில் அல்லது அடுத்த வார முதற்பகுதியில் கொள்வனவு செய்யும் தடுப்பூசிகளில் முதற் தொகுதியாக 5 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாகவும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக நோயாளர்கள் பதிவாகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு முதலில் தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி Reviewed by Author on February 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.