அண்மைய செய்திகள்

recent
-

38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட 7 பேர் கைது

திருகோணமலை பகுதியில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டமை தொடர்பில் 7 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, திருகேணமலை பகுதியில் அமைந்துள்ள தங்க நகை விற்பனை நிலையம் ஒன்றில் கடந்த 8 ஆம் திகதி 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

 இதன்போது திருக்கோணமலை – கோணேஸ்வரம் கடற்பகுதியில் படகு ஒன்றில் வந்துள்ள கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையிட்டு மீண்டும் படகிலேயே தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (25) இந்தச் சம்பவம் தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது திருகேணமலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இந்த கொள்ளையைத் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் பல்வேறு குற்றச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய தற்போது தலைமறைவாகியுள்ள ஐஸ் மஞ்சு எனப்படும் சந்தேக நபரின் சகோதரர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள பொலிஸார் அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் வெளிநாட்டு துப்பாக்கி ஒன்றும் 6 தோட்டாக்கள் என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளனர். 

 இதேவேளை சந்தேக நபர்களால் தப்பிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட படகின் உரிமையாளரை கைது செய்துள்ள பொலிஸார் சந்தேக நபர்கள் பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளை மீட்பதற்காக பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட 7 பேர் கைது Reviewed by Author on February 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.