ஐ.நாவில் சிறிலங்கா விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும் !நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சிறிலங்கா தொடர்பாக மேற்குலக நாடுகள் முன்னெடுக்கின்ற தீர்மானத்தில், இந்தியா பார்வையாளராக இல்லாமல், ஈழத்தமிழர்களுக்கு நீதியினை பெற்றக் கொடுக்க இந்தியாவே தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என எதிர்பார்கின்றோம்.
ஐ.நாவின் தற்போதைய ஆணையாளர், முன்னாள் ஆணையர்கள், ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் குறிப்பிட்டது போல், சிறிலங்காவை பொறுப்புக்கூறவைப்பதற்கு, சிறிலங்காவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த இந்தியா அரசு துணைபுரியவேண்டும்.
இதேவேளை இந்தியா முன்வைக்கின்ற 13ம் திருத்தசட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கள இனவாதம் அனுமதிக்காது என்பதோடு, இலங்கையின் வடக்கு- கிழக்கு பிராந்தியம் தமிழர்களின் பாரப்பரிய தாயகம் என்பதனை அங்கீகரித்த இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினை, தூக்கியெறிந்துள்ள சிங்கள இனவாதம், தமிழர்களின் பாரப்பரிய தேசத்தை சிதைக்கின்ற வகையில் மேற்கொண்டுவருகின்ற சிங்கள குடியேற்றங்களையும், பண்பாட்டு அழிப்பையும் இந்தியா தடுத்து நிறுத்த வேண்டுகிறோம்.
சிங்கள பேரினவாதம் தமிழினத்தின் அடையாளத்தை அழித்தும், தாயகத்தை சிதைத்தும் மேற்கொண்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுத்து நிறுத்தும் தார்மீக்கடமை இந்தியாவுக்கு இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தின் தீவுக்கூட்டங்களில் சீனா நிலைகொள்ள முனைவது, ஈழத்தமிழர்களின் இறமைக்கு முரணாக அமைவது மட்டுமன்றி, தமிழகத்தின் இந்தியாவினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைகின்றது.
ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் முக்கிய காரணியாக அமைவது உள்நாட்டு அரசியலே ஆகும். ஈழத்தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் தமிழகத்தின் வகிபாகம் முக்கியமானதாக அமைய வேண்டும் என எதிர்பார்கின்றோம்.
ஐ.நாவில் சிறிலங்கா விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும் !நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Reviewed by Author
on
March 02, 2021
Rating:
Reviewed by Author
on
March 02, 2021
Rating:


No comments:
Post a Comment